விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த சேலம் தவெக செயலாளர்

499பார்த்தது
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த சேலம் தவெக செயலாளர்
சேலம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டி மற்றும் சூரியூர் பகுதி விவசாயிகளின் நிழல்களை நீர் வழித்தடம் எனக் கூறி சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2004 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதனால் 22 ஆண்டுகளாக சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. கடந்த 15 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் விவசாயிகளை நேரில் சந்தித்து, தலைவர் விஜய் என்றும் உங்களோடு உறுதுணையாக இருப்பார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி