சங்ககிரி: கடன் தொல்லை.. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

79பார்த்தது
சங்ககிரி: கடன் தொல்லை.. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம் மாவெளிபாளையத்தை சேர்ந்தவர் பெரிய தம்பி என்ற மணி (வயது 49), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மங்கையர்கரசி. மணிக்கு மது குடிக்கும் பழக்கம் மற்றும் லாட்டரி சீட்டுக்கள் வாங்கும் பழக்கம் இருந்ததால் அதிகம் கடன் வாங்கி உள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மணி கடந்த சில மாதங்களாக வெளியூர் சென்றிருந்தார். 

நேற்று முன்தினம் (டிசம்பர் 24) வீட்டிற்கு வந்த அவர் மாலையில் வெளியில் சென்று விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். இரவு வரை அவர் வீட்டிற்கு வரவில்லை. நேற்று (டிசம்பர் 25) அதிகாலை வீட்டின் அருகே வெளியில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த மங்கையர்கரசி அவரிடம் கேட்டபோது, மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரிய வந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது, 'லாட்டரி சீட்டுகள் அதிகம் வாங்கியதால் அவருக்கு கடன் ஏற்பட்டிருந்தது. கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது' என்றனர்.

தொடர்புடைய செய்தி