சேலம்: லஞ்சம் வாங்கிய துணை பிடிஓ பணி இடைநீக்கம்

1369பார்த்தது
சேலம்: லஞ்சம் வாங்கிய துணை பிடிஓ பணி இடைநீக்கம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தாழையூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், காபி பார் நடத்த கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பித்தபோது, துணை பிடிஓ கார்த்தி ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பணத்தை கார்த்தியிடம் கொடுத்தபோது போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான துணை பிடிஓ கார்த்தி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி