மகுடஞ்சாவடி அருகே ஆசிரியை சண்முகப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய 3 பக்க கடிதத்தில், 'நான் வாழனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். இவ்வளவு நாள் அட்ஜஸ்ட் பண்ணினேன். ஆனால் இதுக்கு மேல என்னால் முடியவில்லை. ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான். யார் முன்னாடி நான் நல்லா வாழனும்னு நினைச்சேனோ அவர்கள் முன்னாடி என்னை தலைகுனிய வச்சுட்டான். அவனை வாழ விடாதிங்க. இதுக்கு மேல ஒவ்வொரு நிமிஷமும் செத்துகிட்டு இருக்க முடியாது. எனது குடும்பத்தை தூங்க விடாத அளவுக்கு பண்ணிட்டான்' என்று குறிப்பிட்டுள்ளார்.