மகுடஞ்சாவடி அருகே கார் மோதி கூலித் தொழிலாளி பலி

7பார்த்தது
மகுடஞ்சாவடி அருகே கார் மோதி கூலித் தொழிலாளி பலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அக்கரைப்பட்டி பகுதியைச்சேர்ந்த 44 வயதான ஆனந்தன் என்ற கூலி தொழிலாளி, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயன்றபோது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி