சேலம் அருகே அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

1110பார்த்தது
சேலம் அருகே அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை ஆசிரியர்கள் பணிக்கு வந்தபோது, தலைமை ஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 5 மடிக்கணினிகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஆசிரியர் நாகராஜன் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி