சங்ககிரி அருகே லாரி உரிமையாளரின் ஸ்கூட்டர் திருட்டு

57பார்த்தது
சங்ககிரி அருகே லாரி உரிமையாளரின் ஸ்கூட்டர் திருட்டு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மொத்தையனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42). லாரி உரிமையாளர். இவர் நேற்று (ஜூன்.14) சங்ககிரி- திருச்செங்கோடு பிரிவு பகுதியில் உள்ள மளிகைக் கடை முன்பு தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்தபோது ஸ்கூட்டர் திருட்டுப் போனது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் ஸ்கூட்டரை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நபரை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி