சேலத்தில் அரசு பேருந்து நடுவழியில் நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு

1383பார்த்தது
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கன்னங்குறிச்சிக்கு சென்ற அரசு பேருந்து, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆக்சில் கட்டாகி நடுவழியில் நின்றது. ஓட்டுநரின் சமயோசித செயலால் பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பேருந்து சரிசெய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி