சங்ககிரி அருகே லேப்டாப், செல்போன் திருடியவர் கைது

566பார்த்தது
சங்ககிரி அருகே லேப்டாப், செல்போன் திருடியவர் கைது
சங்ககிரி அருகே அக்கமாபேட்டை படையாச்சி தெருவைச் சேர்ந்த நோட்டுப் புத்தக கடை உரிமையாளர் மோகன் (55) வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை பூட்டாமல் இருந்ததை பயன்படுத்தி, லேப்டாப் மற்றும் 3 செல்போன்களை திருடிச் சென்றார். இதுகுறித்து மோகன் அளித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் மீட்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி