சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே சீரகாபாடி பகுதியில் நேற்று மாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அடையாளம் மற்றும் வாகனம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.