மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியாக உயர்ந்துள்ளது

2153பார்த்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியாக உயர்ந்துள்ளது
தமிழக, கர்நாடக மாநில எல்லை காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மாறுபடுகிறது. இன்று இரண்டாவது நாளாக அணைக்கு நீர்வரத்து 2061 கன அடியாக நீடிக்கிறது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று 78.89 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 78.97 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 40.93 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி