மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் வழங்கினார்

3பார்த்தது
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் வழங்கினார்
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி, எம். பி. க்கள் டி. எம். செல்வகணபதி, எஸ். ஆர். சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 181 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி