சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி சாவு

1038பார்த்தது
சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி சாவு
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (59) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி