சேலம் சங்ககிரியில் 2009-ல் 1.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், 15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அம்மையப்பன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பேருந்து நிலையத்தில் 34 கடைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தும், அரசாங்கம் இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.