சங்ககிரியில் நியூட்ரிசியன் மைய உரிமையாளர் வெட்டிக் கொலை

84பார்த்தது
சங்ககிரியில் நியூட்ரிசியன் மைய உரிமையாளர் வெட்டிக் கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி ஸ்டேட் வங்கி அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது 65). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜேந்திரன், அந்த வீட்டிலேயே நியூட்ரிசியன் மையமும் நடத்தி வந்தார். நேற்று காலையில் அவரது நியூட்ரிசியன் மையம் திறந்து கிடந்தது. வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
நியூட்ரிசியன் மையத்துக்கு வந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் ராஜேந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கைகள் துண்டிக்கப்பட்டு கிடந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மோப்பநாய் லில்லி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் அங்கும், இங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த கொலை தொடர்பாக சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி