சங்ககிரி அருகே டூவீலர் மோதி நடந்து சென்றவர் பலி

5பார்த்தது
சங்ககிரி அருகே டூவீலர் மோதி நடந்து சென்றவர் பலி
சங்ககிரி அருகே ராயலூர் சாலையில் ஸ்கூட்டர் மோதி பெயிண்டர் சக்திவேல் (50) உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில், சக்திவேல் மீது ஸ்கூட்டர் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி