சேலம் அருகே ரயில் மோதி வாலிபர் பலி ரயில்வே போலீஸார் விசாரணை

1388பார்த்தது
சேலம் அருகே ரயில் மோதி வாலிபர் பலி ரயில்வே போலீஸார் விசாரணை
ஈரோடு-சேலம் ரயில்வே மார்க்கத்தில், பெரியபுதூர் பகுதியில் நேற்று இரவு சரக்கு ரயில் மீது திடீரென குறுக்கே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது ரயில் மோதி உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கால் துண்டானது. இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி