சேலம்: கண்களில் கருப்பு துணி கட்டி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
சேலம்: கண்களில் கருப்பு துணி கட்டி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சங்ககிரி பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கைகளில் கருப்புக்கொடியை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி