சேலம் - ஈரோடு மெமு பாசஞ்சர் புதிய ரயில் சேவை தொடக்கம்

368பார்த்தது
சேலம் - ஈரோடு மெமு பாசஞ்சர் புதிய ரயில் சேவை தொடக்கம்
சேலம் மற்றும் ஈரோடு இடையே புதிய மின்சார பாசஞ்சர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஈரோட்டிற்கு முன்பதிவில்லா மின்சார பாசஞ்சர் ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு ஈரோட்டிற்கு மெமு ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர, வாரத்தின் ஆறு நாட்களும் இயக்கப்படும்.