சேலம் கொங்கணாபுரம் சனி சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு வர்த்தகம்

55பார்த்தது
சேலம் கொங்கணாபுரம் சனி சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு வர்த்தகம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரம் சனி சந்தை இன்று கூடியது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 9, 800 ஆடுகள், 2200 கோழி, சேவல்கள், 125 டன் காய்கறிகள், 8 டன் பலாப்பழம் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் 10 கிலோ எடை உள்ள ஆடு ரூபாய் 5700 முதல் ரூபாய் 7800 வரையும், 20 கிலோ ஆடு 11, 200 முதல் ரூபாய் 14, 500 வரையும், 30 கிலோ ஆடு 17, 000 முதல் ரூபாய் 27 ஆயிரம் வரையும், வளர்ப்பு குட்டி ஆடு 2, 700 முதல் 3, 200 வரையும் விலை போனது. பந்தய சேவல் ரூபாய் 2500 முதல் 4000 வரையும், கோழி ரூபாய் 200 முதல் ரூபாய் 1, 500 வரையும், ஒரு கிலோ தக்காளி ரூ10 முதல் 15 வரையும், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ 15 முதல் 50 வரையும், விலை போனது. பலாப்பழம் ரூபாய் 150 முதல் 400 வரையும் விலை போனது. இன்று மட்டும் ரூபாய் 5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி