எடப்பாடி: சின்னசாமி (42) என்பவர், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கண்ணே பாப்பா (45) என்பவருடன் அவருக்கு தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 11-ஆம் தேதி இரவு, கண்ணே பாப்பாவின் வீட்டிற்குச் சென்ற சின்னசாமி அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்ணே பாப்பாவின் மகன் நிதீஷ்குமார் (24) தாயுடன் சின்னசாமி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த, தகராறில் ஈடுபட்டு சின்னசாமியைக் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக போலீசார் நிதீஷ்குமாரைக் கைது செய்துள்ளனர்.