தாரமங்கலம் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன. நகராட்சியின் 27 வார்டுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்காக கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம், சதுரங்கம், சிலம்பம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. நேற்று செங்குந்தர் செவிலியர் கல்லூரியில் நடந்த மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர் மன்ற தலைவர் குணசேகரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.