சேலம்: தி. மு. க. பொதுக்கூட்டம் நல உதவி வழங்கிய செல்வகணபதி எம். பி.

62பார்த்தது
சேலம்: தி. மு. க. பொதுக்கூட்டம் நல உதவி வழங்கிய செல்வகணபதி எம். பி.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம், மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் மகுடஞ்சாவடி ஒன்றிய செயலாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தார். 

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் உள்பட நல உதவிகளை வழங்கினார். இதில் கட்சியின் அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர்கள் சம்பத் குமார், சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி