சேலம் மாவட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் நடைபெற்ற டாஸ்மாக் கடை கடையடைப்பு
போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாற்றப்பட்டு, புதிய மேலாளர் சௌந்தர பாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கடையை திறக்க உத்தரவிட்டதை அடுத்து, மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டதும் மதுபிரியர்கள் திரண்டு வந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.