ஆசிரியை தற்கொலைக்கு காரணமான காதலன் கௌதம் சிறையில் அடைப்பு

3பார்த்தது
ஆசிரியை தற்கொலைக்கு காரணமான காதலன் கௌதம் சிறையில் அடைப்பு
சேலம் மகுடஞ்சாவடி அருகே சண்முகப்பிரியா என்ற ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், தனது காதலன் கௌதம்தான் தனது சாவுக்கு காரணம் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, மகுடஞ்சாவடி போலீசார் கௌதம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இன்று அவரை சங்ககிரி கிளை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி