சாப்ட் டென்னிஸ் போட்டி தாரமங்கலம் மாணவி சாதனை பாராட்டு

1பார்த்தது
சாப்ட் டென்னிஸ் போட்டி தாரமங்கலம் மாணவி சாதனை பாராட்டு
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தாரமங்கலம் செங்குந்தர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி பூர்வா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், செங்குந்தர் கல்விக்கழகத்தின் தலைவர் சக்தி கந்தசாமி, துணைத்தலைவர் அமிர்தலிங்கம், நர்சிங் கல்லூரி உதவி செயலர் ரகுபதி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.