சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதையொட்டி, தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் அமைச்சரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன், தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் மைதானத்தை இன்று மாலை பார்வையிட்டனர். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் நிர்வாகிகள் அமரும் பகுதி மற்றும் நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.