குள்ளம்பட்டி ஏரிக்கரை பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி விழா

4பார்த்தது
குள்ளம்பட்டி ஏரிக்கரை பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி விழா
தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி, கோனேரிப்பட்டி காவிரியாற்றில் புனித நீராடுதல், தீர்த்தம் எடுத்தல் ஆகிய நிகழ்வுகளுடன் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, குள்ளம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் திரளான பக்தர்கள் அலகு குத்தியவாறு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவிற்காக அரசிராமணி சுற்றுவட்டார பகுதி மக்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்தி