சேலம் கணினி மென்பொருள் கடையில் திருட்டு

916பார்த்தது
சேலம் கணினி மென்பொருள் கடையில் திருட்டு
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முத்துக்குமார் (37) அன்னதானப்பட்டியில் கணினி மென்பொருள் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையைத் திறந்தபோது, காவலாளியைக் காணவில்லை. பின்னர் கடைக்குள் சென்றபோது ஹார்ட் டிஸ்க், மோடம், செல்போன் திருட்டு போனதும், பொருட்கள் சிதறி கிடந்ததும் தெரியவந்தது. கழிவறையில் இருந்து காவலாளியின் சத்தம் கேட்டது. அவரை மீட்டபோது, மர்ம நபர் காவலாளியை தாக்கி, கழிவறையில் பூட்டிவிட்டு பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரில், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி