சேலம்: கல்குவாரி தண்ணீரில் 2 மூதாட்டிகள் சடலம்

1114பார்த்தது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தூதனூர் பகுதியைச் சேர்ந்த பாவாயி (70) மற்றும் பெரியம்மாள் (75) ஆகிய இரு மூதாட்டிகள் நேற்று காலை முதல் காணாமல் போயினர். உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மூதாட்டிகளின் நகைகள் காணாமல் போனதால், நகைக்காக கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி