சேலம் ஆட்டையாம்பட்டி மருளையம்பாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ரமேஷ் (40), மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.