சேலம்: டூ வீலரில் இருந்து தவறி விழுந்த பெண் லாரி மோதி பலி

1359பார்த்தது
சேலம்: டூ வீலரில் இருந்து தவறி விழுந்த பெண் லாரி மோதி பலி
சேலம் எஸ் கொல்லப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த தங்கமணி தனது மனைவி பழனியம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை நேற்று காலை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சித்தர் கோயில் தனியார் பள்ளி அருகே உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது பழனியம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி