தாரமங்கலம் அருகே டூவீலரில் தவறி விழுந்த தொழிலாளி பலி

1092பார்த்தது
தாரமங்கலம் அருகே டூவீலரில் தவறி விழுந்த தொழிலாளி பலி
மேச்சேரி அருகேயுள்ள அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் (60) என்பவர், தனது மகன் சீனிவாசனுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சின்னப்பையன் படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி