சங்ககிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி

82பார்த்தது
சங்ககிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி, வண்டி பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46), தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நாரப்பன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே சங்ககிரி-திருச்செங்கோடு நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். நடந்து சென்ற அவர் மீது திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே சரவணன் இறந்து விட்டார்.

தொடர்புடைய செய்தி