சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மல்லிகா (52) வீட்டில் 16½ பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து சங்ககிரி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் எடப்பாடி அருகே வெல்லாண்டிசு வலசை சேர்ந்த கார்த்திக் (30) என்பவர் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.