சங்ககிரி அருகே கோபாலனூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் (23), தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ஸ்கூட்டரை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். முழுத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே ஸ்கூட்டரைத் திரும்பத் தருவதாக அவர்கள் கூறியதால் மனமுடைந்த சந்தோஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.