சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த நந்தகுமார், கொண்டலாம்பட்டி வெள்ளை பிள்ளையார் கோவிலில் படுத்திருந்தபோது, காக்காபாளையத்தைச் சேர்ந்த சிவராஜ் (29) என்பவர் தனது ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டில் விட்டார். இதற்கான வாடகை பணத்தை நந்தகுமாரின் குடும்பத்தினர் கொடுக்க மறுத்ததால், சிவராஜ் அவரது செல்போனை வாங்கிச் சென்றார். இதைத் தொடர்ந்து, நந்தகுமாரின் தம்பி கோகுல்ராஜ் (27) தனது நண்பர்களான தருண்குமார் (26), மனோகரன் (29) ஆகியோருடன் சேர்ந்து சிவராஜை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் விசாரித்து, மூவரையும் கைது செய்தனர்.