விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுத்திய 457 டிரைவர் லைசன்ஸ் ரத்து

0பார்த்தது
விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுத்திய 457 டிரைவர் லைசன்ஸ் ரத்து
சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களைத் தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்தல், ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் விபத்து மற்றும் உயிர் இழப்பை ஏற்படுத்திய 457 ஓட்டுநர்களின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி