வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக வாக்குச்சாவடி பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அமானி கொண்டலாம்பட்டியில் நடைபெற்றது. இதில் ராஜமுத்து எம்எல்ஏ தலைமை தாங்கி பேசுகையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை திமுகவினர் எதிர்த்தாலும், மறுபுறம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து ஓட்டு சேர்த்தல், நீக்கல் பணியை செய்வதாக குற்றம்சாட்டினார். திமுகவினர் இரட்டை வேடம் போடுவதாகவும், அதிமுகவினர் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று எஸ். ஐ. ஆர். பணியை கவனத்துடன் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.