வீரபாண்டி பகுதியில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி

75பார்த்தது
வீரபாண்டி பகுதியில் வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி
சேலம் மாவட்டம் வீரபாண்டி பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் பயிறு வகைகளில் களை மேலாண்மை மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்த வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற வேளாண்மை துணை அலுவலர் பழனிசாமி பயிற்சி அளித்தார். இதில் 25 விவசாயிகள் 5 குழுக்களாகப் பிரிந்து, உளுந்து, துவரை வயல்களில் உள்ள களைகளை சேகரித்து, அவற்றின் பண்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கங்களைப் பெற்றனர். மேலும், துவரையில் உளுந்து ஊடுபயிராக பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் நுனி கிள்ளுதலால் விளைச்சல் அதிகரிப்பது குறித்தும் விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி