சேலம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசாரம் நடந்தது. காரிப்பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயம், இடுபொருட்கள் தயாரித்தல், மண்பரிசோதனை அவசியம், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. டிரோன் செயல்முறை விளக்கம் விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.