சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் செஞ்சுருள் சங்க அமைப்பு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ஆட்டையாம்பட்டியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், ஆட்டையாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொண்டலாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் முரளி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.