உத்தம சோழபுரத்தில் கொப்பரை 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கு ஏலம்

10பார்த்தது
உத்தம சோழபுரத்தில் கொப்பரை 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கு ஏலம்
சேலம், உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 14 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் பங்கேற்றனர். 737 கிலோ கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். முதல் தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 188.65-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 183.19-க்கும் விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக ரூ. 161.61-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 70.10-க்கும் விலை போனது. மொத்த ஏலத்தொகை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 182 ஆகும்.

தொடர்புடைய செய்தி