சேலம்: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் விடுதி விழா கொண்டாட்டம்

76பார்த்தது
சேலம்: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் விடுதி விழா கொண்டாட்டம்
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் 11-ம் ஆண்டு விடுதி விழா கொண்டாடப்பட்டது. துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாணவர்களிடையே ஊக்கம் அளிக்கும் வகையில் விடுதி நாட்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

விடுதி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் விடுதி பொறுப்பாளர்கள் உமாமகேஷ்வரி, விக்னேஷ்வரா, ராகுல், அல்போன்ஸ், ஆண்டனி காட்சன், பவித்ரா, நிஷா ஆகியோர் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி