சேலம்: சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு மூட்டைகளை திருடியவர் கைது

56பார்த்தது
சேலம்: சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு மூட்டைகளை திருடியவர் கைது
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ராக்கிப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 64 குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மதிய உணவு தயாரிக்க சத்துணவு அமைப்பாளர் ராதா வந்தார். சத்துணவு மையத்தை திறந்து பார்த்த போது அங்கிருந்த அரிசி, துவரம் பருப்பு, சுண்டல், முட்டை, சமையல் எண்ணெய் மற்றும் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் திருட்டு போய் இருந்தது. 

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளி அருகிலேயே பல நாட்களாக தங்கி இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மதர்நாயக் மகன் சிகாந்த் (வயது 30) என்பவர் திருடிய பொருட்களை வைத்து இருந்தது தெரிய வந்தது. அதாவது, சத்துணவு மையத்துக்குள் புகுந்து அரிசி, பருப்பு, முட்டைகளை திருடி சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி