சேலம் கஞ்சமலை கார்த்திக் நகர் பகுதியைச் சேர்ந்த 73 வயதான சந்திரபிரகாசம், சொந்தமாக 107 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை கட்டி பூஜை செய்து வந்தார். அவர் அடிக்கடி ஜீவ சமாதி அடையப்போவதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு மயங்கி கிடந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.