மருத்துவ உபகரணங்களை பழுதுநீக்க செய்முறை பயிற்சி

1பார்த்தது
மருத்துவ உபகரணங்களை பழுதுநீக்க செய்முறை பயிற்சி
சேலம் அன்னபூரணி என்ஜினீயரிங் கல்லூரியின் உயிரியல் பொறியியல் துறை சார்பில், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பழுது நீக்கும் நுட்பங்கள் குறித்த 2 நாள் செய்முறை பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஏ. அன்பு செழியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் வினோத் கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் அவற்றை பழுது நீக்கும் முறைகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி