சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து ஆய்வு செய்தார். பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 37 வாக்குச்சாவடிகளிலும் நேரில் சென்று வாக்காளர் திருத்த படிவங்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டுள்ளதா? என்றும், அவை சரியான முறையில் பூர்த்தி செய்யப்படுகிறதா? என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.