சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கே. கே. நகரில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாய் கலைவாணி (32) தனது 8 மாத கைக்குழந்தை சுபாஷினியுடன் தரைத்தள தண்ணீர் தொட்டியில் தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துயரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.