சேலத்தில் பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்கள்

2பார்த்தது
சேலத்தில் பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்கள்
பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (55) நேற்று முன்தினம் சேலத்தில் உறவினர் வீட்டுக்கு வந்தனர். நேற்று காலை திருமணத்திற்காக மொபட்டில் சின்னப்பம்பட்டிக்கு புறப்பட்டபோது, உத்தமசோழபுரம் அருகே முகத்தை துணியால் மறைத்த இருவர் மகாலட்சுமி கழுத்தில் இருந்த 3½ பவுன் நகையை பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி கூச்சலிட்டபோதும், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.